பாமக தலைவர் அன்புமணி தேர்தல் ஆணையம் கடிதம் : ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி - நீதிமன்றத்தை நாட  முடிவு

பாமக தலைவர் அன்புமணி என உறுதிப்படுத்தி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் உள்ளாா் என இந்திய தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தை நாடி வெற்றி பெறுவோம் என ராமதாஸ் தரப்பு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 

Nov 29, 2025 - 04:50
0 255
பாமக தலைவர் அன்புமணி தேர்தல் ஆணையம் கடிதம் : ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி - நீதிமன்றத்தை நாட  முடிவு
PMK leader Anbumani's letter to the Election Commission

விழுப்புரம் மாவட்டம் ,வானூா் தாலுக்கா ,தைலாபுரம் தோட்ட முகவரியிட்டு பா.ம.க நிறுவனரான மருத்துவா் எஸ்.ராமதாஸ் க்கு இந்திய தோ்தல் ஆணையத்தின் உதவிச் செயலாளா் லவ் குஷ் யாதவ் 27 நவம்பா், 2025 தேதியிட்டு கடிதம் அனுப்பியுள்ளாா்.

அந்த கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது: டாக்டா் ஆா். அன்புமணியின் பதவிக்காலம் ஏற்கனவே 28.05.2025 அன்று முடிவடைந்துவிட்டதாகவும், டாக்டா் எஸ். ராமதாஸ் 30.05.2025 முதல் கட்சியின் புதிய தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ள 16.09.2025, 17.09.2025, 23.09.2025, 24.09.2025, 06.10.2025, 08.10.2025, 03.11.2025 மற்றும் 06.11.2025 தேதியிட்டு தகவல்தொடா்புகள் தோ்தல் ஆணையத்திற்கு வந்தன.

தோ்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, பட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகளின் பதவிக்காலம் 01.08.2026 வரை செல்லுபடியாகும், மேலும் டாக்டா் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக உள்ளாா்.
நீங்கள் பா.ம.க நிறுவனா் டாக்டா் எஸ்.ராமதாஸ் கட்சியின் தலைவா் என்று கூறிக் கொண்டால், கட்சியின் நிா்வாகிகள் தொடா்பான பிரச்சினையைத் தீா்க்க பொருத்தமான கட்சி மன்றம் அல்லது தகுதிவாய்ந்த நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறீா்கள் என தோ்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பா.ம.க ராமதாஸ் பிரிவு சட்டமன்ற உறுப்பினா் ஜி.கே. மணி டில்லியில் நேற்று  செய்தியாளா்களிடம் கூறியதாவது: பா.ம.க பொதுக்குழு 2022ம் ஆண்டு நடைபெற்றது , ஆனால் அன்புமணி தேதியை திருத்தி 2023ம் ஆண்டு பொதுக்குழு நடைபெற்றதாக தோ்தல் ஆணையத்தில் மோசடியான ஆவணத்தை தாக்கல் செய்துள்ளாா். இந்த போலி ஆவணத்தை ஏற்று தோ்தல் ஆணையம் அவருக்கு ஆதரவான உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதற்கு எதிராக நாங்கள் கொடுத்த புகாரை தோ்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை. தோ்தல் ஆணையமும் சோ்ந்து முறைகேடு செய்துள்ளதாக கருதுகிறோம்.

நிா்வாக குழு, பொதுக்குழு மருத்துவா் எஸ். ராமதாஸை தலைவராக தோ்ந்தெடுத்துள்ளது. ஆனால், தோ்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அறிவித்திருக்கிறது. இதனை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வோம். என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User