இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்..ஓ.பி.எஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு..

Mar 21, 2024 - 18:19
0 169
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்..ஓ.பி.எஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு..

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி தாக்கல் செய்த மனுவை கடந்த 16-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க புகழேந்திக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், இதன் மீது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையத்தில் அவசர மனு ஒன்றை புகழேந்தி அளித்துள்ளார். அதில், தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி அதிமுக படுதோல்வியை சந்திப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார். அதிமுக உடைந்து நிற்பதையும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும் என புகழேந்தி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User