சென்னையில் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்..வடமாநில நபரை கைது செய்த போலீசார்..
சென்னையில் பல் மருத்துவ மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வடமாநிலத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பூக்கடை முத்துச்சாமி மேம்பாலம் பகுதியில் பல் மருத்துவக் கல்லூரி மாணவிகள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த மாணவிகளை பார்த்து தவறான முறையில் சைகை காட்டியுள்ளார்.
இதை கண்டுகொள்ளாமல் மாணவிகள் சென்ற நிலையில், அவர்களின் அருகே சென்று மாணவி ஒருவரை இடித்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பல் மருத்துவக் கல்லூரி விடுதியின் காவலாளி பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நிஷார் அன்சாரி என்பவரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து முகமது நிஷார் அன்சாரியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
1
Sad
0
Angry
0




Comments (0)