நீலகிரி மாவட்டத்தை சூறையாடிய மழை.. எங்கும் வெள்ளக்காடு..மண் சரிவால் சாலைகள் துண்டிப்பு

நீலகிரி: மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பந்தலூரில் 298 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்று (ஜூன் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Jun 29, 2024 - 12:34
0 930
நீலகிரி மாவட்டத்தை சூறையாடிய மழை.. எங்கும் வெள்ளக்காடு..மண் சரிவால் சாலைகள் துண்டிப்பு
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த நான்கு நாட்களாக தீவிரமடைந்துள்ள நிலையில்  ப‌ல்வேறு பகுதிகளில் மண் சரிவு கள் ஏற்பட்டு சாலை போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. உதகை குன்னூர் கோத்தகிரி குந்தா பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக பந்தலூரில் அதிக கன மழை பெய்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி கடலூரில் 298 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பந்தலுாரில் அத்திக்குன்னா வழியாக கூடலுார் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த வழியாக, உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் நிஷா, அவரது மகன் ஜோஸ், நண்பர் ஆல்வின் ஆகியோர் காரில் வந்த போது, மண் சரிவில் கார் தேயிலை தோட்டத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் காயங்களுடன் தப்பினர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர்.
மண் சரிவால் சாலை துண்டிக்கப்பட்டு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது  நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் நீலகிரி மாவட்டத்தில் காலை 8.30 மணிவரை 1029 மிமீ மழை பதிவாகியுள்ளது அதில் அதிக பட்சமாக  பந்தலூர் பகுதியில் 29.80 மிமீ மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்ந்து வருவதால் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாகளுக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User