தக்கலை அருகே வெல்டிங் தொழிலாளி மர்ம மரணம்

மது அருந்திவிட்டு குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என தெரியவந்தது

Dec 27, 2023 - 13:48
Updated: 3 years ago
0 147
தக்கலை அருகே வெல்டிங் தொழிலாளி மர்ம மரணம்

தக்கலை அருகே குளத்தில் தொழிலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே பெருஞ்சிலம்பு பகுதியைச் சேர்ந்த பிராங்க்ளின் ஜெனிகர் (39), வெல்டிங் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.மாலை 7 மணிக்கு பிராங்க்ளின் ஜெனிகர் வெளியே செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார்.ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இரவு முழுவதும் அவர் வராததால் அதிர்ச்சியடைந்த மனைவி பல இடங்களில் தேடியுள்ளார்.

இதற்கிடையில், பிராங்க்ளின் ஜெனிகர் அருகில் உள்ள குளத்தில் இறந்து மிதந்தாக தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுவுக்கு அடிமையான பிராங்க்ளின் ஜெனிகர் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என தெரியவந்தது.மேலும்,போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User