பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை.. கொடூரனை கைது செய்த நிலக்கோட்டை போலீஸ்.. கடுமையான தண்டனை கிடைக்குமா?

May 04, 2024 - 20:33
0 303
பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை.. கொடூரனை கைது செய்த நிலக்கோட்டை போலீஸ்.. கடுமையான தண்டனை கிடைக்குமா?

வத்தலக்குண்டு அருகே குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி. 38 வயதான இவர், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு நேற்று (மே 3) பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் விருவீடு காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். விசாரணை நடத்திய போலீசார், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். 

இதையடுத்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்து போலீசார், பிச்சைமணி என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து நிலக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் நல்ல கண்ணன் முன்னிலையில் பிச்சைமணி ஆஜர்படுத்தப்பட்டார். 

விசாரணை நடத்திய மேஜிஸ்திரேட், 15 நாட்கள் அவரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இரண்டரை வயது குழந்தைக்கு ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குழந்தைகளிடம் இதுபோன்று அத்துமீறும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User