Mamitha Baiju: “நான் ஹீரோயின் ஆனது இப்படித்தான்,,” வணங்கான், பிரேமலு பிரபலம் மமிதா பைஜூ ஓபன்!

மலையாளத்தில் ரிலீஸான பிரேமலு திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார் மமிதா பைஜூ. சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த மமிதா பைஜூ, எப்படி ஹீரோயினாக வந்தேன் என்பது பற்றி மனம் திறந்துள்ளார்.

Mar 12, 2024 - 15:54
0 445
Mamitha Baiju: “நான் ஹீரோயின் ஆனது இப்படித்தான்,,” வணங்கான், பிரேமலு பிரபலம் மமிதா பைஜூ ஓபன்!

மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான பிரேமலு திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழக ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற பிரேமலு, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக கொண்டாடப்படுகிறார் மமிதா பைஜூ. முதலில் இவர் பாலா இயக்கிய வணங்கான் படத்திலும் லீடிங் கேரக்டரில் நடித்து வந்தார்.

ஆனால், வணங்கான் படப்பிடிப்பின் போது பாலா தன்னை அடித்ததாக கூறி சர்ச்சையை கிளப்பிய மமிதா, அதன் பின்னர் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இந்நிலையில் திரையுலகில் தனது வளர்ச்சி பற்றி மனம் திறந்துள்ளார். கேரளாவின் கோட்டயம் பகுதியில் பிறந்த மமிதா, இப்போது குடும்பத்துடன் கொச்சியில் வசித்து வருகிறாராம். சின்ன வயதில் இருந்து டான்ஸ் கற்றுக்கொண்ட அவர், ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.

 

அதன் பின்னர் தான் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைத்ததாகவும், தற்போது பிரேமலு ரிலீஸுக்குப் பின்னர் மேலும் பல புதிய படங்களில் கமிட்டாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். ஜிவி பிரகாஷுடன் ரெபெல் படத்தில் நடித்துள்ள மமிதா, அடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவுள்ளார். சைக்காலஜி படித்துள்ள மமிதாவுக்கு அசின் தான் பிடித்த நடிகையாம். தமிழில் வெளியாகும் படங்களை அதிகம் பார்ப்பதால், கோலிவுட்டில் நடிப்பதில் பிரச்சினை இல்லை என்றுள்ளார். மமிதா நடிப்பில் மலையாளத்தில் ஹிட் அடித்த பிரேமலு, வரும் 15ம் தேதி தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User