மகா(ன்)பிரசாதம்: வெற்றி நிச்சயம்!

மற்றவர் பாதிப்பின்றி, தகுதியை வளர்த்துக்கொண்டு இலக்கை அடைய முயல்வதே உண்மையான வெற்றி..

Apr 08, 2026 - 12:20
0 770
மகா(ன்)பிரசாதம்: வெற்றி நிச்சயம்!
மகா(ன்)பிரசாதம்

மகா(ன்)பிரசாதம்: வெற்றி நிச்சயம்!

- ஜெயாப்ரியன்

வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் வரும்போதே அது மற்றவர்கள் தோல்வி அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பாகவும் ஆகிவிடுகிறது அல்லவா? அப்படியானால் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் சரியா? தவறா?

இதற்கு மகாபெரியவா எதாவது சொல்லியிருக்கிறாரா? என்று தேடியபோது கிடைத்தது.

 “எந்த ஒரு விஷயத்துலயும் ஜயிக்கணும்னு நினைக்கறது சரியா தப்பான்னு என்னைக் கேட்டா, சரின்னுதான் சொல்லுவேன்.

என்னடா,பெரியவாளே இப்படிச் சொல்றாளேன்னு நினைக்கக் கூடாது. ஏன்னா, எனக்கே கூட அந்த ஆசை இருக்கு.” சொன்ன மகான் சற்றே நிறுத்த, எல்லோரும் திகைக்க, அவரே தொடர்ந்தார்.

 “இதோ இப்போ  அனுஷ்டிச்சுண்டு இருக்கேனே சன்யாச தர்மம். அதைக் கிஞ்சித்தும்(சிறிதும்) பிசகிடாம கடைபிடிக்கணும்கறது என்னோட அவா. அப்படின்னா, இதுல நான் ஜயிக்கணும்னுதானே நினைக்கறேன்.

அதேசமயம், நான் இப்படி ஜெயிக்கறதால வேற யாருக்காவது பாதிப்பு வருதான்னு பார்த்தா இல்லைதானே. ஆனா, இதை நான் யாரோடயும் போட்டி போட்டுண்டு செய்யக் கூடாது.

அதேசமயம், ஒரு நாணயத்தை சுண்டிப்போட்டோம்னா, பூ வேணும்னாலும் விழலாம், தலை வேணும்னாலும் விழலாம். ஏன்னா, காசுக்கு ரெண்டு பக்கம் இருக்கறதால ரிஸல்டும் இப்படித்தான் இருக்கும்.

இந்த மாதிரிதான் போட்டி. இதுல யாராவது ஒருத்தருக்குதான் ஜயம் கிடைக்கும். இது தெரிஞ்சுதான் போட்டியே நடக்கறது. அதனால, இங்கே ஒருத்தரை இன்னொருத்தர் ஜயிக்க நினைக்கறதும் தப்பு கிடையாது.

ஆனா, தனக்குத் தகுதியே இல்லாம, தகுதி உள்ள ஒருத்தர் ஜயிக்கறதைப் பார்த்து தானும் அப்படி ஜயிக்கணும்னு நினைக்கறது பொறாமை. அதுதான் படக்கூடாது. இதைப் புரிஞ்சுண்டாலே போதும், எந்தக் காரியமா இருந்தாலும் அதுல தகுதியை வளர்த்துண்டு ஜயிக்கறது தப்பில்லைன்னும் புரிஞ்சுடும், ஜயமும் நிச்சயமாகிடும்”

(பிரசாதம் மணக்கும்)

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User