Lokesh Kanagaraj: சூப்பர் ஸ்டார் படம் ட்ராப்..? ரூட்டை மாற்றிய லோகேஷ் கனகராஜ்!

கோலிவுட்டின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தனது புதிய படம் ஒன்றை ட்ராப் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mar 28, 2024 - 13:33
0 303
Lokesh Kanagaraj: சூப்பர் ஸ்டார் படம் ட்ராப்..? ரூட்டை மாற்றிய லோகேஷ் கனகராஜ்!

இனிமேல் ஆல்பம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். ஸ்ருதிஹாசனுடன் ரொம்பவே தயங்கி தயங்கி ரொமான்ஸ் செய்த லோகேஷ், இனி நடிப்பது சந்தேகம் தான் எனக் கூறியிருந்தார். அதேபோல், ஜூன் மாதம் ரஜினியின் தலைவர் 171 ஷூட்டிங் தொடங்கும் என அப்டேட் கொடுத்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் என லோகேஷின் கைவசம் பல படங்கள் உள்ளன.  

இதனிடையே பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸுடன் லோகேஷ் கூட்டணி வைக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. பாகுபலி வெற்றிக்குப் பின்னர் பிரபாஸின் கால்ஷீட்டுக்காக பல முன்னணி இயக்குநர்கள் போட்டிப் போட்டு வருகின்றனர். ஆனால், பிரபாஸே லோகேஷ் கனகராஜ்ஜிடம் கதை கேட்டு சீக்கிரமே ஒரு படம் பண்ணலாம் என சொன்னதாகத் தெரிகிறது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ்ஜும் பிரபாஸுக்காக தரமான ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வருவதாக சொல்லப்பட்டது.  

மாஸ் ஹீரோக்களான விஜய், கமல், ரஜினி வரிசையில் பிரபாஸுடனும் லோகேஷ் கனகராஜ் இணையவிருந்தது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் விரைவில் இதன் அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே லோகேஷ் – பிரபாஷ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.    

ரஜினியின் தலைவர் 171, கார்த்தி நடிப்பில் கைதி 2 என இந்த இரண்டும் தான் லோகேஷின் தற்போதைய டார்க்கெட். அதன்பின்னர் விக்ரம் 2ம் பாகம் அல்லது ரோலக்ஸ் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படங்கள் முடிய மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால், பிரபாஸ் கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User