விரைவில் வெளியாகிறது மக்களவைத் தேர்தல்... தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக ஆலோசனை

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு, இன்று மாலை டெல்லி திரும்புகின்றனர்.

Feb 24, 2024 - 11:47
Updated: 2 years ago
0 226
விரைவில் வெளியாகிறது மக்களவைத் தேர்தல்... தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக ஆலோசனை

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். 

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், ஆணைய அதிகாரிகள் குழுவினர் முன்னதாக சென்னை வந்தனர். 

இதையடுத்து தமிழ்நாடு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நட்சத்திர ஹோட்டலில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் உள்ளிட்டோர் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர். 

இதைத்தொடர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின், வருமான வரி, போதைப்பொருள் தடுப்பு, சுங்கத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன்பின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு, இன்று மாலை டெல்லி திரும்புகின்றனர்.
 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User