மீண்டும்  லாக்டவுன்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை  

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடைபெறுகிறது. மேற்காசிய போர்ச்சூழல் குறித்தும், அதற்கு மாநிலங்கள் தயாராக இருப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது. லாக்டவுன் கொண்டு வருவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கபடலாம் என தெரிகிறது. 

Mar 26, 2026 - 11:14
0 2.5
மீண்டும்  லாக்டவுன்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை  
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை  

ஈரான், அமெரிக்க போரின் காரணமாக உலகம் முழுவதும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது

இந்நிலையில், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர் சூழலால் இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் தேவைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்.

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து மாநில அரசுகளின் தயார்நிலையை பிரதமர் கேட்டறிய உள்ளார். 'டீம் இந்தியா' என்ற அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதே இக்கூட்டத்தின் முக்கிய இலக்காகும். 

தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் முதலமைச்சர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். முன்னதாக, இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனையும் நடத்தப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தை போல இந்த சூழலை சமாளிக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், மீண்டும் ஒரு லாக்டவுன் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா என்ற அச்சம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. 

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User