அம்பத்தூர்: தொழிலாளி மதுபாட்டிலால் குத்திக்கொலை

சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Dec 16, 2023 - 13:12
Updated: 3 years ago
0 151
அம்பத்தூர்: தொழிலாளி மதுபாட்டிலால் குத்திக்கொலை

அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளி ஒருவர் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே ரயில்வே நிலையம் சாலையில் சம்தாரியா நகரைச் சேர்ந்த விஜயகுமார் வயது (44) நேற்று ரயில்வே சாலையில் உள்ள மதுபான கடைக்கு மது அருந்து சென்றுள்ளார். 

மது அருந்திவிட்டு வரும் வழியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பீர் பாட்டிலால் தொண்டையில் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பம் குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விஜயகுமார் உடன் வந்த நண்பர்கள் ஏதேனும் மது போதையில் சண்டை ஏற்பட்டு பீர் பாட்டினால் குத்திவிட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? பழிக்கு பழியாக தீர்த்துக்கப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணையை அம்பத்தூர் போலீசார் தொடங்கியுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User