சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்…கூலி தொழிலாளி கைது.. அரியலூரில் அதிர்ச்சி

May 06, 2024 - 10:55
0 222
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்…கூலி தொழிலாளி  கைது.. அரியலூரில் அதிர்ச்சி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கட்டாயமாக கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை காவல்துறையினர்  போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த அந்த கொடூரனின் பெயர் சுபாஷ். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வசித்து வரும் சுபாஷ் கூலி வேலை செய்து வருகிறான். அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளான். 

இந்நிலையில் சிறுமி தனது பாட்டியுடன் ஆண்டிமடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது சுபாஷ்  அங்கிருந்து சிறுமியை  வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட  சிறுமி கதறி அழுது துடித்துள்ளார்.

இந்நிலையில் கூலி தொழிலாளி சுபாஷ் நடந்த சம்பவத்தை சிறுமியின் பெற்றோரிடம் போன் செய்து தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிறுமியை காதலித்து அவளை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமில்லாமல் அதனை பெண்ணின் பெற்றோருக்கும் போன் செய்து தகவல் தெரிவித்த நபரின் செயலால் அப்பகுதியே பரபரப்படைந்துள்ளது. இப்படி பட்ட ஆண்கள் மத்தியில் பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User