Karthik Subbaraj: “விஜய், அஜித்தை டைரக்ட் பண்றது முக்கியம் இல்ல..” கார்த்திக் சுப்புராஜ் அதிரடி!

விஜய், அஜித்தின் படங்களை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ள கருத்து கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jun 01, 2024 - 13:52
0 346
Karthik Subbaraj: “விஜய், அஜித்தை டைரக்ட் பண்றது முக்கியம் இல்ல..” கார்த்திக் சுப்புராஜ் அதிரடி!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் அந்தமானில் தொடங்கவுள்ளது. சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர் போன்ற சீனியர் நடிகர்களும் சூர்யா 44ல் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதாக சூர்யா 44ல் கமிட்டாகியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

விஜய், அஜித்தை இயக்குவது முக்கியமில்லை
இந்நிலையில், விஜய், அஜித் படங்களை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி, சீயான் விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா என மாஸ் ஹீரோக்களின் படங்களை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், இதுவரை விஜய், அஜித் கூட்டணியில் இணைந்தது கிடையாது. இதுகுறித்து சமீபத்தில் நடந்த விருது விழாவில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களை இயக்குவது மட்டுமே ஒரு இயக்குநரின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. அவர்களை இயக்கினால் தான் சிறந்த இயக்குநர் என்ற எந்த அடையாளமும் கிடையாது எனக் கூறியுள்ளார்.

மீண்டும் ரஜினியுடன் கூட்டணி
மேலும், எனக்கு விஜய், அஜித்தை இயக்குவது மட்டுமே இலக்கு கிடையாது எனவும் கார்த்திக் சுப்புராஜ் ஓபனாக பேசியது திரையுலகினருக்கே ஷாக்கிங்காக அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், மாஸ் ஹீரோக்கள் குறித்து இவ்வளவு போல்டாக பேசியதை ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். அதேநேரம் பேட்ட படத்துக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பல கதைகள் சொன்னதாகவும், ஆனால் அதில் எதும் செட்டாகவில்லை என்றும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். இருப்பினும் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைய வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படம் இயக்குவேன் என கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 44 ஷூட்டிங்
அதேபோல் அதே விருது மேடையில் சூர்யா குறித்தும் ஒபனாக பேசியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அதில், நந்தா படம் வெளியானதில் இருந்தே சூர்யாவின் நடிப்பை பார்த்து வியந்து வருகிறேன். நீண்ட நாட்களாக நாங்கள் இணைய வேண்டும் என பிளான் செய்து வந்தோம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரிலீஸான பின்னர் தான் சூர்யா 44 ஸ்க்ரிப்ட்டை பைனல் செய்தோம். மேலும், சூர்யா 44 கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும் எனவும் கார்த்திக் சுப்புராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த வாரம் அந்தமானில் தொடங்கும் சூர்யா 44 படப்பிடிப்பில் சூர்யாவும் கலந்துகொள்ளவுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User