"குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் - இறையாண்மையை சிதைக்கும் மத்திய அரசு..." கமல்ஹாசன் கண்டனம்..

குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Mar 12, 2024 - 14:11
0 292
"குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் - இறையாண்மையை சிதைக்கும் மத்திய அரசு..." கமல்ஹாசன் கண்டனம்..

குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் மத்திய அரசு பொதுமக்களை பிளவுபடுத்தி, இறையாண்மையை சிதைக்க துடிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து 2019ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இந்த சட்டதிருத்தத்தை கொண்டுவந்தபோதே மக்கள் நீதி மய்யம் கடுமையாக எதிர்த்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 4 ஆண்டுகள் காலம் கடத்தி, நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் சட்டத்தை அமல்படுத்துவது பாஜகவின் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்தச் சட்டம் என்பது உண்மை என்றால், பல்வேறு இன்னல்களை சந்தித்த இலங்கைத் தமிழர்களை பட்டியலில் சேர்க்காதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானமும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ள நிலையில், இவற்றையெல்லாம் மீறி மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User