Kamal: தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டடம்… கமல் கொடுத்த நிதி… உற்சாகத்தில் விஷால், கார்த்தி!

புதிய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.

Mar 09, 2024 - 17:57
0 267
Kamal: தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டடம்… கமல் கொடுத்த நிதி… உற்சாகத்தில் விஷால், கார்த்தி!

கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என ஆர்வமாக இருந்தார். அதற்கு முன்பாக நடிகர் சங்கத்துக்கு இருந்த கடன்களை பல கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் திரட்டிய நிதி மூலம் அடைத்துவிட்டார். இந்நிலையில் தற்போது நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டி வருகின்றனர். இதற்காக பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் திரை பிரபலங்களை சந்தித்து வருகின்றனர்.  

இந்நிலையில், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் நடிகர் சங்க கட்டடத்துக்காக நிதி கொடுத்துள்ளார் கமல்ஹாசன். அதன்படி தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதனால் விரைவில் நடிகர் சங்க கட்டட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். அதேபோல், சூர்யா, கார்த்தி இணைந்து 25 லட்சம் நிதி வழங்கியிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User