Kalki Release Date: ரசிகர்களை சந்திக்க ரெடியான பிரபாஸ், கமல்… கல்கி 2898 AD ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Apr 27, 2024 - 18:13
0 366
Kalki Release Date: ரசிகர்களை சந்திக்க ரெடியான பிரபாஸ், கமல்… கல்கி 2898 AD ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: பாகுபலி வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா ஹீரோவாகிவிட்ட பிரபாஸ், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் மட்டுமே கமிட்டாகி வருகிறார். பிரம்மாண்டமான மேக்கிங், பான் இந்தியா ரிலீஸ் என பிரபாஸ் வேற லெவலில் மாஸ் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ் படங்கள் பிரபாஸின் மார்க்கெட்டை பதம் பார்த்தன. அதிலிருந்து சலார் படத்தின் மூலம் மீண்டு வந்த பிரபாஸ், அடுத்து கல்கி அவதாரம் எடுத்துள்ளார். 

தெலுங்கில் இன்னொரு பிரம்மாண்டமான மூவியாக உருவாகியுள்ளது கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும், வில்லனாக கமல்ஹாசனும் நடித்துள்ளது கல்கி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. சமீபத்தில் அமிதாப் பச்சன் கேரக்டருக்கான கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில், கல்கி 2898 ஏடி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் ஜூன் 27ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இதுபற்றிய அப்டேட்டை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது கல்கி படக்குழு. அதில், பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளனர். கமலின் இந்தியன் 2 திரைப்படமும் ஜூன் மாதம் வெளியாகிறது. அதே மாதம் கல்கியும் ரிலீஸாகவுள்ளது கமல் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. புராண கால கதையை சயின்ஸ் பிக்‌ஷனுடன் இணைந்து இயக்கியுள்ள நாக் அஸ்வின், பிரபாஸுக்கு தரமான ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User