நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி, பங்குதாரர்கள் அதிர்ச்சி : தங்கம் விலை குறைவு, இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி 

வார தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சை கொடுத்துள்ளது. அதே நேரம் இந்திய பங்குச்சந்தை கடு வீழ்ச்சி அடைந்து, பங்குதாரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

Mar 09, 2026 - 04:30
0 365
நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி, பங்குதாரர்கள் அதிர்ச்சி : தங்கம் விலை குறைவு, இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி 
தங்கம் விலை குறைவு, இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி 

கடந்த சனிக்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,050 விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.290-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2.90 லட்சத்திற்கும் விற்பனையாஆனது.

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

ஈரான் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச பொருளாதார சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. வார தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன.

இன்றைய தினம் காலையில் சென்செக்ஸ் 2,371 புள்ளிகள் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,371 புள்ளிகள் குறைந்து 76,558 புள்ளிகளில் வர்த்தகம்; தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் நிஃப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User