வீட்டை விட்டு வெளியே கிளம்பிய ஜீவா... எமனாக வந்த லாரி.. விபத்தில் சிக்கி பலியான சோகம்

May 10, 2024 - 12:23
0 263
வீட்டை விட்டு வெளியே கிளம்பிய ஜீவா... எமனாக வந்த லாரி.. விபத்தில் சிக்கி பலியான சோகம்

சென்னை மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர் மீது லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஜீவா  அப்பகுதியில் உள்ள  அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் வெளியே செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். 

அதே போல தான் ஜீவாவும் விடுமுறை என்பதால் இன்று காலை மதுரவாயல் பாலத்தின் கீழே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவரது வாகனத்தின் மீது மோதியதால் தூக்கி வீசப்பட்ட ஜீவா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு  வந்த போக்குவரத்து காவல்துறையினர் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை ஒட்டி வந்த டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டார். 

இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ள போலீசார் அதன் நம்பரை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் இருந்த 10ம் வகுப்பு மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருப்பது அவரது பெற்றோர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User