இன்ஷியலை மாற்றிய ஜேசன் சஞ்சய்: விஜய்க்கு பதிலாக சங்கீதா பெயர் சேர்ப்பு 

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது இன்ஷியலை மாற்றி இருக்கிறார். வி என்பதற்கு பதிலாக சங்கீதா பெயரை குறிக்கும் எஸ் என கையெழுத்திட தொடங்கி உள்ளராம். 

Mar 12, 2026 - 08:51
0 536
இன்ஷியலை மாற்றிய ஜேசன் சஞ்சய்: விஜய்க்கு பதிலாக சங்கீதா பெயர் சேர்ப்பு 
விஜய்க்கு பதிலாக சங்கீதா பெயர் சேர்ப்பு 

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும்  சங்கீதா அந்த  மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஹா என்ற மகளும் உள்ளனர்.தனது மகன், மகளுடன் கணவர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதிக்கவும் சங்கீதா இன்னொரு மனுத் தாக்கல் செய்துள்ளார் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இவரின் முதல் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான பணிகள் வேகம் பிடித்து உள்ளன. இது தவிர, தனது அடுத்த படத்துக்கான பணிகளையும் அவர் தொடங்கியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்டு மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் இன்ஷியலை பயன்படுத்தவில்லை என தெரிகிறது. தந்தையின் பெயருக்கு பதிலாக அவர் ஜேசன் சஞ்சய்  S என்ற முறையில் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வரும் 'S' என்பது அவரது தாய் சங்கீதாவின் பெயரைக் குறிக்கிறது. முன்னதாக, இன்ஸ்டாவில் தனது தந்தை விஜயைப் பின்தொடர்வதை ஜேசன் நிறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User