பொங்கலுக்கு  "ஜனநாயகன்" ரிலீஸ் இல்லை: தனிநீதிபதி உத்தரவுக்கு தடை: ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் 

விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை ஜன. 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், பொங்கல் பண்டிகைக்கு ஜன நாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Jan 09, 2026 - 11:48
0 286
பொங்கலுக்கு  "ஜனநாயகன்" ரிலீஸ் இல்லை: தனிநீதிபதி உத்தரவுக்கு தடை: ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் 
"Jananayagan" not releasing for Ponga

கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதைத்தொடா்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. அதில், ஜன நாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க இன்று காலை தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று4.30 மணியளவில், இந்த மனு விசாரணைக்கு வந்தது.  தணிக்கை வாரியம் சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும், ஜன நாயகன் படம் தொடர்பாக தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடர்பான அடுத்த விசாரணை ஜன. 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் தர பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கவும் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

21-ம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User