திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்படிக்கை... மார்ச் 18-ல் கையெழுத்து என தகவல்...

Mar 16, 2024 - 08:20
0 228
திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்படிக்கை... மார்ச் 18-ல் கையெழுத்து என தகவல்...

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்த உடன்படிக்கை மார்ச் 18ம் தேதி கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகித்துள்ள திமுகவுடன் இணைந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. அதன்படி காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகள் எவை என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

கடந்த முறை காங்கிரஸ் வென்ற 4 தொகுதிகளில் இந்த முறை திமுக போட்டியிட விரும்புவதாகவும், திருச்சி, ஆரணி, தேனி ஆகிய தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகளை தேர்வு செய்யுமாறு காங்கிரசை திமுக கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த விவரம் அடங்கிய பட்டியல் திமுகவிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொகுதி உடன்படிக்கை மார்ச் 18 ஆம் தேதி கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User