ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி விரைவில் இந்தியா வருகை 

மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள BRICS வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி புதுடெல்லிக்கு வருகை தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

May 07, 2026 - 10:49
0 373
ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி விரைவில் இந்தியா வருகை 
ஈரான் வெளியுறவு துறை அமைச்சர்

BRICS அமைப்பிற்கு தங்கள் நாடு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஈரான் இந்த அமைப்பில் முறையாக இணைந்ததிலிருந்து, முக்கிய BRICS கூட்டங்களில் தங்கள் நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்று வருகின்றனர். 

ஒருவேளை BRICS உச்சிமாநாட்டிற்காக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்தால், அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.  மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் 'BRICS' கூட்டமைப்பு ஒரு ஆக்கபூர்வ பங்கை வகிக்க ஈரான் விரும்புவதாக தெரிகிறது.

இந்த சூழலில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வர கூடும் என்று வெளியாகி இருக்கும் தகவல், மேற்கு ஆசிய (மத்திய கிழக்கு) பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஈரான் அமைச்சரின் வருகை நிகழ்வு இந்தியா-ஈரான் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பிராந்திய நிலைத்தன்மைக்கும் பங்களிக்கும் வகையில் அமைய கூடும். இருந்தாலும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வருகையை அந்நாடு உறுதி செய்யவில்லை. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User