இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: டெல், அவிவ் நகரங்கள் மீது கொத்து குண்டுகள் வீச்சு 

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதலை தொடங்கியுள்ளது.  டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது.  சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொத்து குண்டுகளை வீசி ஈரான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.  

Mar 10, 2026 - 04:07
0 904
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: டெல், அவிவ் நகரங்கள் மீது கொத்து குண்டுகள் வீச்சு 
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்

அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் இடையே 10-வது நாளாக மேலாக போர்பதற்றம் நீடித்​து வருகிறது. ஈரானுக்கு ஆதர​வாக லெப​னானை சேர்ந்த ஹிஸ்​புல்லா கிளர்ச்​சிப் படை இஸ்​ரேலை குறி​வைத்து ஏவு​கணை​களை தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி​யாக வான், தரைவழி​யாக லெப​னான் மீது இஸ்​ரேல் ராணுவம் தீ​விர தாக்​குதல்​களில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்​ரேலின் ராணுவ தலை​மையக​மான டெல் அவிவ் மற்​றும் முக்​கிய ராணுவ தளங்​கள், பல்​வேறு நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்​சி​யாக ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்தி வரு​கிறது. வான் வழி தாக்​குதலை முறியடிக்க இஸ்​ரேல் ராணுவம் சார்​பில் அயர்ன் டோம் மற்​றும் சி டோம் பாது​காப்பு கவச அமைப்​பு​கள் நிறுவியுள்ளன.

ஆனால் கடந்த சில நாட்களாக இஸ்ரேலை குறிவைத்து ஈரான் ராணுவம், தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை வீசி வருகிறது. ஈரானின் ஏவுகணை சுமார் 23,000 அடி உயரத்தில் வெடித்து 20 சிறிய குண்டுகளாக பிரிகிறது. இந்த கொத்து குண்டுகள் சுமார் 8 கி.மீ. பரப்பளவு வரை சிதறி விழுகின்றன. இவற்றை நடுவானில் இடைமறித்து அழிப்பது கடினமாக உள்ளது. இதனால் இஸ்ரேலில் பல நகரங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.

டெல் அவிவ் நகரில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட பொது பதுங்கு அரங்குகள் உள்ளன. டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களில் பூமிக்கு அடியில் பிரம்மாண்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக போர்க் காலங்களில் இஸ்ரேலில் உயிரிழப்பு குறைவாக உள்ளது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User