Indian 2: “யப்பா இவரு போதி தர்மர்ப்பா!” இந்தியன் தாத்தா நிலைமை இப்படி ஆயிடுச்சே!

ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் கமலின் லுக், கெட்டப் குறித்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Jun 26, 2024 - 12:26
0 355
Indian 2: “யப்பா இவரு போதி தர்மர்ப்பா!” இந்தியன் தாத்தா நிலைமை இப்படி ஆயிடுச்சே!

சென்னை: விக்ரம் வெற்றிக்குப் பின்னர் கமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி முதலில் பட்ஜெட் பிரச்சினை காரணமாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை தற்போது ரிலீஸ் வரை கொண்டு வந்துவிட்டார். கமல் – ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் இந்தியன் தாத்தா எஸ்கேப் ஆகிவிடுவதாக சீன் வைத்திருந்தார் ஷங்கர். அதனால் தான் அதே கூட்டணியில் இந்தியன் 2 எப்போது வரும் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர். கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறவுள்ளது. 

ஆனால், நேற்று வெளியான இந்தியன் 2 ட்ரைலரை பார்த்த ரசிகர்கள், இந்தியன் தாத்தாவின் நிலையை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்தியன் படத்தில் கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் தான் செம்ம மாஸ் என சொல்லலாம். ஊழல், லஞ்சத்துக்கு எதிராக சுதந்திர போராட்ட வீரரான இந்தியன் தாத்தா செய்த தாறுமாறான சம்பவங்கள் தான் இந்தியன் படத்தின் கதை. வர்மக் கலை மூலம் வில்லன்களை அசால்டாக அட்டாக் செய்து ஆக்ஷனில் ஸ்கோர் செய்திருந்தார். இப்படி ஸ்கோர் செய்ததால் தான், இந்தியன் தாத்தா இப்போதும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோ லிஸ்ட்டில் உள்ளார். 

இந்தியன் 2ம் பாகத்திலும் கமலின் இந்தியன் தாத்தா சம்பவங்கள் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியான இந்தியன் 2 ட்ரைலரில் கமலின் கெட்டப்பும் அவர் செய்யும் அட்ராசிட்டிகளும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக ஒரேயொரு கெட்டப்பில் மட்டுமே வருவார் கமல். தற்போது உருவாகியுள்ள 2ம் பாகத்தில் கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் விதவிதமாக உள்ளது. ஒரு காட்சியில் நடிகர் ஆசிஸ் வித்யார்த்தி போன்றே இருக்கிறது கமலின் கெட்டப். இதனை மீம் மெட்டீரியலாக மாற்றி பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அதேபோல், இந்தியன் தாத்தா கெட்டப்பிற்காக கொஞ்சம் நீளமாக முடி வைத்துள்ள கமலை பார்த்து, இது அப்படியே போதி தர்மர் போல இருப்பதாகவும் கலாய்த்து வருகின்றனர். ஏஆர் முருகதாஸ் இயக்கிய 7 ஆம் அறிவு படத்தில் சூர்யா போதி தர்மர் கெட்டப்பில் நடித்திருந்தார். அதன் அடுத்த வெர்ஷனாக இந்தியன் தாத்தா கெட்டப் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். மேலும், இந்தியன் தாத்தா இன்றுவரை தனித்து தெரிய காரணம், அந்த கேரக்டரில் இருக்கும் நிதானம், எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத நுட்பம். இரண்டாம் பாகத்தில் வரும் இந்தியன் தாத்தா ஓய்வுப்பெற்ற சர்க்கஸ் கோமாளி மாதிரிதான் இருக்கிறார். தப்பித்து போன தாத்தா அமெரிக்காவில் வட்டி தொழில் செய்து வந்தவர் போல மிதப்பாக தெரிவதாகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

முக்கியமாக சட்டையில்லாமல் இந்தியன் தாத்தா கமல் ஃபைட் செய்யும் சீன், காமெடியாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். அதிலும் இந்தியன் தாத்தா வயது 106 எனவும், அவரா இப்படி பறந்து பறந்து சண்டை போடுவார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், இயக்குநர் ஷங்கர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியன் 2 படத்திலும் ஷங்கர் தனது போலி பிரம்மாண்டம் மூலம் ரசிகர்களை ஏமாற்ற நினைக்கிறார். ஒரு படத்திற்குத் தேவையான காட்சிகள் தான் அதன் பிரம்மாண்டத்தை கேட்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக படம் முழுக்க பிரம்மாண்டத்தை திணித்தால் அது சுத்த வேஸ்ட் எனவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் பேசுவதை காட்டுவது, செய்தி சேனல்கள், போராட்டம், மக்கள் கூட்டம் ஆகியவற்றை காட்டுவது ஒரு புரட்சி படமாகிவிடாது. தற்போது வெளியாகவுள்ள 2ம் பாகம், பழைய இந்தியன் சம்பாதித்து வைத்திருக்கும் பிராண்டை வைத்து காசு பார்க்கும் பித்தலாட்டம் என காட்டமாக விமர்சித்துள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User