இந்தியா - தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர் : நாளை ராஞ்சியில் நடக்கிறது

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கிறது.

Nov 29, 2025 - 10:15
0 359
இந்தியா - தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர் : நாளை ராஞ்சியில் நடக்கிறது
India - South Africa ODI series

டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகி தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்த ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது.

கேப்டன் சுப்மன்கில் காயம் அடைந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார். டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தியதால் பெரும் நம்பிக்கையுடன் ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது. 

தென்னாப்பிரிக்க அணியிலும் கேப்டன் பவுமா, ப்ரீட்ஸ்கே, ப்ரெவிஸ், டி காக், மார்க்ரம், ரிக்கெல்டன், டோனி என வலுவான பேட்டிங் உள்ளது. ஆல்ரவுண்டர்களாக ஜான்சென், கார்பின் போஸ்ச் உள்ளனர். பந்துவீச்சில் நிகிடி, கேசவ் மகாராஜ், பர்கர், ஜான்சென் உள்ளனர். 

இந்திய அணிக்கு சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்பது பலம் ஆகும்.அதேசமயம், இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாகவே உள்ளது. தென்னாப்பிரிக்காவின் வலுவான பேட்டிங் ஆர்டரை இந்திய பந்துவீச்சு சிதைத்தால் மட்டுமே வெற்றி வசப்படும். 

மேலும், ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் அடுத்த 2 போட்டியிலும் அசத்திய நிலையிலும், முதல் 2 போட்டியில் சொதப்பிய விராட் கோலி கடைசி போட்டியில் கலக்கிய நிலையில் அவர்களது சிறப்பான ஆட்டம் இந்த தொடரிலும் வெளிப்படுத்துவார் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User