வாக்குப்பதிவு அதிகரிப்பு: யாருக்கு சாதகம், டென்ஷனில் திமுக, அதிமுக 

தமிழக சட்டமன்ற தேர்தலில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பது, யாருக்கும் சாதமாக இருக்கும் என திமுக, அதிமுக என இருகட்சிகளும் டென்ஷன் ஆக்கி உள்ளது. 

Apr 25, 2026 - 05:21
0 774
வாக்குப்பதிவு அதிகரிப்பு: யாருக்கு சாதகம், டென்ஷனில் திமுக, அதிமுக 
யாருக்கு சாதகம், டென்ஷனில் திமுக, அதிமுக 

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் 5.73 கோடி மொத்த வாக்காளர்களில், 85 சதவீதம் அதாவது 4.82 கோடி பேர் வாக்களித்து இருந்தனர். 2021 சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில்  23 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். 

கூடுதலாக பதிவாகி உள்ள 23 லட்சம் வாக்குகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என திமுக  முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்களுடன், ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசித்துள்ளார். இதில் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை, விஜய் தன் பக்கம் இழுத்துள்ளார். இதனால், 150க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என, தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், ஸ்டாலினுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். 

இதே போன்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்களுடன், ஓட்டுப்பதிவு அதிகரித்திருப்பது குறித்து ஆலோசித்துள்ளார். அப்போது, 'கடந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த பட்டியலினத்தவர், கிறிஸ்துவர்கள், இளைஞர்கள் ஓட்டுகள்தான் த.வெ.க.,வுக்கு சென்றுள்ளன.  'நகரங்களில் இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் பிரியும்போது, அ.தி.மு.க., கூட்டணி வெல்லும் வாய்ப்புள்ளது' என, கூட்டணி கட்சித் தலைவர்கள், பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் விழுந்திருக்கும் வாக்கு என்பது அதிமுக, திமுக என இருகட்சி பெருபான்மையான அனுதாபிகள் வாக்குகள். அதே போன்று நாம் தமிழர் கட்சி கட்சி 5 சதவிகித வாக்குகள் விஜய் கபளீகரம் செய்து உள்ளார். தி.மு.க.,-அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் அளித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், யாருக்கு வெற்றி கிடைக்கும் என, இரு கட்சியினருக்கும் கடும் டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User