Ilaiyaraaja: “ரஜினி கேரக்டரில் நடிக்க ஆசை..” இளையராஜா பயோபிக் விழாவில் தனுஷ் ஓபன்!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

Mar 20, 2024 - 15:19
0 241
Ilaiyaraaja: “ரஜினி கேரக்டரில் நடிக்க ஆசை..” இளையராஜா பயோபிக் விழாவில் தனுஷ் ஓபன்!

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இளையராஜா என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், இளையராஜா, தனுஷ், கமல்ஹாசன், இயக்குநர்கள் அருண் மாதேஸ்வரன், வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது இளையராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டார்.  

முன்னதாக இளையராஜா பயோபிக்கில் நடிப்பது குறித்து தனுஷ் நெகிழ்ச்சியாக பேசினார். எனது வாழ்வில் இருவரது பயோபிக்கில் நடிக்க தான் அதிகம் ஆசைப்பட்டேன். அதில் ஒருவர் இளையாராஜா, இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்போது இந்த இரண்டில் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கவுள்ளேன், இது எனக்கு ரொம்பவே கர்வமாக உள்ளது எனக் கூறினார்.  

அதாவது இளையராஜவே என்னை அழைத்து அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டும் எனக் கேட்டார். எனது சினிமா வாழ்வில் நான் இந்தளவிற்கு வந்ததே மிகப் பெரிய வெற்றியாக பார்க்கிறேன் என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார். மேலும், இளையராஜாவின் இசை எப்போதும் என்னை வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. இனிமேலும் அது என் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்றார்.  

இறுதியாக இளையராஜா பயோபிக் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு அட்வைஸ் செய்த தனுஷ், எந்த பிரஸரும் இல்லாமல் என்ஜாய் செய்து இந்தப் படத்தை இயக்கினால் போதும். அப்போது தான் நமக்குப் பிடித்த இளையராஜாவை நம்மால் திரையில் கொண்டு வர முடியும் எனக் கூறினார். இளையராஜா பற்றி சொல்ல இன்னும் அதிகம் இருப்பதாகவும், அதையெல்லாம் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் பேசுவேன் என்றும் தனுஷ் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User