திருமணம் நடந்தால் அது உன்னோடு தான்..!   டிவி தொகுப்பாளர் கடத்தல்...இளைஞரை சிறைபிடிக்கப் பார்த்த இளம்பெண்ணுக்கு சிறை...

இளம் தொழிலதிபர் திரிஷாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Feb 24, 2024 - 08:57
Updated: 2 years ago
0 231
திருமணம் நடந்தால் அது உன்னோடு தான்..!   டிவி தொகுப்பாளர் கடத்தல்...இளைஞரை சிறைபிடிக்கப் பார்த்த இளம்பெண்ணுக்கு  சிறை...

தெலங்கானா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரை கடத்தி திருமணம் செய்ய வற்புறுத்தியதாக இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் பிரணவ். இவர் திருமணத்திற்காக தனது புகைப்படம் மற்றும் விவரங்களை திருமண வரன் தேடும் இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணவ்வின் புகைப்படத்தை பார்த்து, டிஜிட்டல் மார்க்கெட்டிங் நடத்திவரும் திரிஷா என்ற இளம்பெண் பார்த்து விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் சந்தித்து பழகியபின் திருமணத்திற்கு பிரணவ் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து திரிஷா கடந்த 11 ஆம் தேதி தனது ஆண் நண்பர் மூலம் சிலருக்கு பணம் கொடுத்து பிரணவை கடத்தி அறை ஒன்றில் அடைத்து வைத்து, திருமணம்  செய்ய வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவழியாக திரிஷாவின் பிடியில் இருந்து தப்பிய பிரணவ், உப்பல் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உப்பல் போலீசார், இளம் தொழிலதிபர் திரிஷாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆட்கடத்தலில் ஈடுபட்ட கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User