மக்களுக்கு ஏற்றம் தரும் I.N.D.I.A. கூட்டணி - காதர் மொய்தீன் வாக்கு சேகரிப்பு

Apr 17, 2024 - 09:17
0 264
மக்களுக்கு ஏற்றம் தரும் I.N.D.I.A. கூட்டணி - காதர் மொய்தீன் வாக்கு சேகரிப்பு

மக்களுக்கு ஏற்றம் தருவது I.N.D.I.A. கூட்டணி மட்டுமே எனக்கூறி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் வாக்குசேகரித்தார்.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஜின்னா மேம்பாலத்தின் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.

அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும்  பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, டெல்லியில் உள்ள அரசை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  மக்களுக்கு ஏற்றம் தரும் அரசாக I.N.D.I.A. கூட்டணி அரசை  உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இஸ்லாமியர்களுக்கு முதன்முதலாக அரசுத்துறையில் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர் தான் என காதர்  மொய்தீன் நினைவுகூர்ந்தார். மேலும் இந்த பிரச்சாரத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் , திமுக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்..

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User