சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம்: ஜெ.தீபா நையாண்டி

அப்போது இருந்த அதிமுக போல முழு வீச்சில் தற்போது இல்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம் தான் என ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார். 

Feb 24, 2026 - 08:34
Updated: 5 months ago
0 639
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம்: ஜெ.தீபா நையாண்டி
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம்

 

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பழம்பெரும் நடிகை சச்சு, காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி திருச்சி வேலுச்சாமி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி  உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

 

இதையடுத்து ஜெ.தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைக்கவில்லை. என்டிஏவோடு தான் கூட்டணி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல் கொடுத்ததால் தான் கூட்டணியில் இடம் பிடித்துள்ளார் டிடிவி தினகரன்.

 

என்டிஏ கூட்டணி வெற்றி பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. இவர்களை கண்டு மக்கள் வெறுத்து போய்ட்டாங்க. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. என்னுடைய ஆதரவு தமிழ்நாட்டு மக்களுக்கு தான். மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கு என்னுடைய ஆதரவு. 

 

விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது நியாயமான ஒன்று தான். தற்போது மேடைகளில் தவெக தலைவர் விஜய் பேச்சுகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா பேசிய தான்.தவெக தலைவர் விஜய் அதிமுக ஓட்டை பிரிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா கட்சியினர் ஓட்டையும் பிரிப்பார். 

 

தேர்தல் முடிந்த பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம். பங்காளிகள் உரிமை கோரும் சொத்து யாருடையது என்பது என்பது பிரச்சினை. அதிமுக தொண்டர்களுக்கு சொந்தமானது. அப்போது இருந்த அதிமுக போல முழு வீச்சில் தற்போது இல்லை. சசிகலா புது கட்சி ஆரம்பிக்கட்டும் அதற்காக காத்திருக்கிறேன். பார்க்கலாம். நான் அரசியலில் தான் இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பலமுறை முயன்றுள்ளேன். ஆனால் சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை. ஜெயலலிதா வீட்டில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியை அழைக்க அவரை சந்திக்க முயன்றோம். 

 

ஆனால் அவர் மதிக்க கூட இல்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி கூட அவரை அழைக்க முடியவில்லை. என்னை சந்திப்பதை தவிர்ப்பது போல தெரிகிறது. என்னை ஒதுக்க அவர் யார்? ஜெயலலிதாவிற்கு நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் என்பது மறைக்கப்பட்டு இருக்கிறது. எனக்கு அரசியல் சாயம் இல்லை" என்று அவர் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User