பாஜகவை முழுமையாக ஆதரிக்கிறேன்.. அதிமுக சக்திகள் ஒன்று சேரணும்..! ஓ.பி.எஸ். அதிரடி..!

Feb 18, 2024 - 17:56
0 243
பாஜகவை முழுமையாக ஆதரிக்கிறேன்.. அதிமுக சக்திகள் ஒன்று சேரணும்..! ஓ.பி.எஸ். அதிரடி..!

பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை [18-02-2024] செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தலில் எங்களுக்கு சிறப்பான கூட்டணி அமையும். தமிழக கட்சிகளில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் கட்சிகள் குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்" என்று கூறினார். 

இந்நிலையில், மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க அரசு 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளதாகவும், பா.ஜ.க.வை முழுமையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User