மனைவியோடு குடும்பம் நடத்த முடியலையே.. குறுக்கே நிற்கும் தாய்மாமன்.. கணவர் செய்த பயங்கர செயல்

பழனி அருகே கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் குடும்பம் நடத்துவதற்கு இடையூறாக இருந்த பெண்ணின் தாய் மாமனை நண்பருடன் சேர்ந்து கணவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 22, 2024 - 10:36
0 442
மனைவியோடு குடும்பம் நடத்த முடியலையே.. குறுக்கே நிற்கும் தாய்மாமன்.. கணவர் செய்த பயங்கர செயல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராம்குமார்.  இவரது மனைவி மீனாவுடன் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இதனிடையே, மீனாவின் தாய் மாமனான ஜெகதீஸ்வரன், பெண்ணின் வீட்டில் வசித்து வருவதால் தான் குடும்பம் நடத்த முடியவில்லை என எண்ணிய ராம்குமார் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி, விவசாய தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரனை வழிமறித்த ராம்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ஜெகதீஸ்வரன் நிலை குலைந்து சரிந்து விழுந்தார்.  

இதனை கண்டு அதிர்ந்து போன அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெகதீஸ்வரனை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவருக்கு உடலில்  முன்னேற்றம் இல்லாத்தால் , மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, மீனாவின் கணவர் ராம்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். வழக்குப்பதிவு செய்த ஆயக்குடி போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.  இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User