என்னை விட்டு போயிட்டாளே.. அதிர்ச்சியில் இளையராஜா எடுத்த விபரீத முடிவு.. அதிர்ந்த சென்னை

சென்னை புழல் அருகே மனைவி பிரிந்து சென்றதால், சோகத்தில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Apr 23, 2024 - 18:31
0 292
என்னை விட்டு போயிட்டாளே..  அதிர்ச்சியில் இளையராஜா எடுத்த விபரீத முடிவு.. அதிர்ந்த சென்னை

புழல் அடுத்த கதிர்வேடு அருகேயுள்ள வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (29). இவர் அதே பகுதியில், சிறிய சிறிய கூலி வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.  

 

குடி போதைக்கு அடிமையாக இருந்து வந்த இளையராஜா, நேற்றிரவு (22.04.2024) அதேபகுதியில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, தனது மனைவியின் ஞாபகம் வருவதாக கூறி, புலம்பியதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து வீட்டுக்கு சென்ற அவர், உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

காலையில் வீடு திறக்கப்படாததால், அவ்வழியாக சென்றவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, இளையராஜா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி பிரிந்து போன சோகத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User