குமரியில் கன மழை - திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம்

கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது

Dec 18, 2023 - 13:32
Updated: 3 years ago
0 130
குமரியில் கன மழை - திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கன மழையால் முக்கிய அணை பகுதிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் காட்டாற்றுவெள்ளம் காரணமாக 2வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்  முழுவதும் கனமழை இரண்டு நாட்களாக பெய்து வருகிறது.இந்த  நிலையில் முக்கிய அணை பகுதிகளான பேச்சிபாறை  அணையில் இருந்து 5000 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 5000 கன அடி நீரும், சிற்றார் அணையில் இருந்து 500 கன அடி நீரும் வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக  திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் சீறிப்பாய்ந்தும் தடுப்புகளை தாண்டியும் அடித்து செல்கிறது. இதனால் 2-வது நாளாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது பேரூராட்சி நிர்வாகம். கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User