நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.1040 குறைவு 

வாரத்தின் தொடக்க நாளே தங்கம் விலை குறைந்து  நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. 

Jun 01, 2026 - 04:31
0 512
நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.1040 குறைவு 
தங்கம் விலை குறைவு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தறுமாறாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆவதால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை தங்கம்  சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,630-க்கும், ஒரு சவரன் ரூ. 1,17,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனையானது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து ரூ. 1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User