காங்கிரஸுக்கு குட் பை... பாஜகவில் ஐக்கியமானார் விஜயதரணி!

Feb 24, 2024 - 14:29
Updated: 2 years ago
0 223
காங்கிரஸுக்கு குட் பை... பாஜகவில் ஐக்கியமானார் விஜயதரணி!

கன்னியாகுமரி மாவட்டம்  விளவங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக  உள்ள விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். 

காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் விஜயதரணி. அவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். விஜயதரணியும் காங்கிரஸ் சார்பில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் சமீபகாலமாக காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். காங்கிரஸில் உரிய மரியாதை தரவில்லை என்று குற்றம்சாட்டி வந்தார். இதனால் அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அவரைக் காங்கிரஸில் தக்க வைக்க கே.எஸ். அழகிரி தொடங்கி, தற்போதைய காங்கிரஸ் மாநில தலைவர் செலவப்பெருந்தகை வரை பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் தலைமையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக போன்ற தேசிய கட்சியில் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க :

https://kumudam.com/Will-Warner,-who-withdrew-due-to-injury-play-in-the-IPL

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User