Good Bad Ugly: மீண்டும் காட்ஃபாதர் ரூட்டில் அஜித்… குட் பேட் அக்லி படத்தில் செம்ம சர்ப்ரைஸ்..?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படம் பற்றிய தரமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

May 02, 2024 - 18:08
0 320
Good Bad Ugly: மீண்டும் காட்ஃபாதர் ரூட்டில் அஜித்… குட் பேட் அக்லி படத்தில் செம்ம சர்ப்ரைஸ்..?

சென்னை: அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி குட் பேட் அக்லி முதல் ஷெட்யூலில் அஜித் கலந்துகொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார் அஜித். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் இன்னும் முடியவில்லை.  

அதேநேரம் குட் பேட் அக்லி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. அதன் காரணமாக விடாமுயற்சி முடியும் முன்னரே குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளாராம் அஜித். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் முரட்டு ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்ததோடு, 100 கோடி ரூபாய் வசூலித்தது. இதனையடுத்து தான் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சான்ஸ் கொடுத்தார் அஜித். 

இதனால் குட் பேட் அக்லி படத்தை தரமான ஃபேன் பாய் சம்பவமாக கொடுக்க வேண்டும் என் அசுரத்தனமாக வேலை பார்த்து வருகிறார் ஆதிக். ஸ்க்ரிப்ட், மேக்கிங் மட்டுமின்றி அஜித்தின் கெட்டப்பையும் மாற்ற ஆதிக் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்றுவிதமான கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம். காட்ஃபாதர் என்ற வரலாறு படத்தில் 3 கேரக்டர்களில் நடித்திருந்தார் அஜித். அதே ரூட்டில் குட் பேட் அக்லி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க ரெடியாகிவிட்டாராம். 

இந்த மூன்றில், தற்போதைய சால்ட் அன்ட் பெப்பர் லுக் கண்டிப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், யங்ஸ்டர் லுக்கில் கறுப்பு ஹேர் ஸ்டைலில் ஒரு கெட்டப்பும், நீளமான முடி வளர்த்தபடி ஒரு கெட்டப்பும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் இப்போதே குட் பேட் அக்லியை கொண்டாட ரெடியாகிவிட்டனர். மேலும் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User