மீண்டும் உயர்ந்த தங்கம்: சவரனுக்கு ரூ. 800 உயர்வு 

நேற்றைய தினம் காலை, மாலை என இருவேளையும் குறைந்த தங்கம் விலை. இன்று காலை மீண்டும் உயர்ந்து இருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்கு  உள்ளாக்கி இருக்கிறது.

Apr 03, 2026 - 04:28
0 276
மீண்டும் உயர்ந்த தங்கம்: சவரனுக்கு ரூ. 800 உயர்வு 
சவரனுக்கு ரூ. 800 உயர்வு 

இந்நிலையில் நேற்று காலை  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மாலையில் சவரனுக்கு ரூ.1,600குறைந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,800-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரை விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User