ஆடு புலி ஆட்டம் ஆடும் தங்கம்: சவரனுக்கு ரூ.1840 உயர்வு

தங்கம் விலை மீண்டும் ஆடு புலி ஆட்டம் ஆட தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் தங்கம் விலை குறைந்தநிலையில், இன்று சவரனுக்கு ரூ.1840 உயர்ந்துள்ளது. 

May 06, 2026 - 04:29
0 324
ஆடு புலி ஆட்டம் ஆடும் தங்கம்: சவரனுக்கு ரூ.1840 உயர்வு
சவரனுக்கு ரூ.1840 உயர்வு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 

நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1440 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,400 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User