தினசரி ஊசலாடும் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா? நிபுணர்கள் சொல்வதென்ன?

தங்கத்தின் விலை இன்று குறையத் தொடங்கியுள்ளது. சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ. 53,680 ஆக விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கு விற்பனையாகிறது.

Apr 25, 2024 - 10:57
0 2.1
தினசரி ஊசலாடும் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா? நிபுணர்கள் சொல்வதென்ன?

தங்கம் மிகச்சிறந்த முதலீடு என்பதால் இந்தியர்கள் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அவ்வப்போது குறைந்து மீண்டும் விலை உயர்ந்து ஊசலாட்ட நிலையிலேயே இருக்கிறது தங்கம் விலை.

மார்ச் 28ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 6,250 ரூபாயை எட்டியது. இதனால் 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இதன் பின்னரும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

தங்கம் விலை ஏப்ரல் மாதத்தில் ரூ.54,000த்தை தாண்டியது. ஏப்ரல் 19ஆம் தேதி புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன்  55,120 ஆக விற்பனையானது. இதனால் நகை வாங்குபவர்கள் கலக்கமடைந்தனர். 

கடந்த 20ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. 22ஆம் தேதியன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 6,845 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் தடாலடியாக குறையத் தொடங்கியது.

கடந்த 23ஆம் தேதியன்று அதிகபட்சமாக கிராமுக்கு 145 ரூபாய் குறைந்து 6,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.1,160 குறைந்து 53 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர். அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அப்போது தங்கம் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்தனர். 

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 24) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,730 க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,513க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,104க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இன்று 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ.6710 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ. 53,680 ஆக விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஊசலாட்டமாகவே இருக்கிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. 

தங்கத்தின் விலை பரமபதம் ஆடி வரும் நிலையில், இந்நிலையில் ஈரான் இஸ்ரேல் போரால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.  வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசு குறைந்துள்ளது. ரூ.86க்கு விற்பனையாகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User