சென்னையில் தனியார் வங்கியில் வாயு கசிவு-ஊழியர்கள் மயக்கம்
வங்கிக்கு எதிரே அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சென்னையில் தனியார் வங்கியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் மயக்கம் அடைந்தனர்.
ஐ.டி நிறுவனங்கள் அதிகமாக செய்யப்பட்டு வரும் இடமான சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள(குளோபல் இன்ஃபோ சிட்டி ) தனியார் வளாக கட்டிடத்தில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.இதில் நேற்று இரவு ஊழியர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது, குளிர்சாதன இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு உடலுக்கு ஒவ்வாத வாயு கசிந்துள்ளது.
இதன் விளைவாக அப்பொழுது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த 13 ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் போன்றவை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அருகில் இருந்த வங்கிக்கு எதிரே அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் இதுகுறித்து அந்த பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)