GOAT: “Habibi come to Dubai..” கேரளாவை தொடர்ந்து துபாய் பறந்த விஜய்… கோட் சம்பவம் லோடிங்!

விஜய்யின் கோட் பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. கேரளாவைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறவுள்ளது.

Apr 05, 2024 - 15:50
0 271
GOAT: “Habibi come to Dubai..” கேரளாவை தொடர்ந்து துபாய் பறந்த விஜய்… கோட் சம்பவம் லோடிங்!

சென்னை: விஜய்யின் 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இந்தாண்டு வெளியாகவுள்ளது. இந்த மாதம் கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகும் என சொல்லப்படும் நிலையில், படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் நடந்த கோட் ஷூட்டிங்கில் விஜய் கலந்துகொண்டார். கேரளா சென்ற நாள் முதல் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வரை விஜய்யை கொண்டாடித் தீர்த்தனர் மல்லுவுட் ரசிகர்கள். இதனைப் பார்த்து கோலிவுட் ரசிகர்களே கொஞ்சம் மிரண்டு தான் போய்விட்டனர்.  

இந்நிலையில் கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறவுள்ளது. இதற்காக விஜய் இன்று சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையம் சென்ற விஜய்யின் புகைப்படங்களும் வீடியோவும் வைரலாகி வருகின்றன. வெங்கட் பிரபு உட்பட அவரது டீம் ஏற்கனவே துபாய் சென்றுவிட்டதாகவும், விஜய் அங்கு சென்றதும் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே நாளை டாப் ஸ்டார் பிரசாந்த் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மாஸ்டர் பிரபுதேவா அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அப்போதும் கோட் படத்தில் இருந்து அப்டேட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பிரபுதேவாவின் போஸ்டரை மட்டும் பிரபுதேவா ரிலீஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User