GOAT: சிவகார்த்திகேயன் வரிசையில் இன்னொரு பிரபலம்... விஜய்க்காக கோட் படத்தில் இணையும் ஹீரோ..?

தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் வரிசையில் இன்னொரு பிரபலம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 27, 2024 - 18:06
0 308
GOAT: சிவகார்த்திகேயன் வரிசையில் இன்னொரு பிரபலம்... விஜய்க்காக கோட் படத்தில் இணையும் ஹீரோ..?

சென்னை: விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டது. அதேபோல், விஜய்யின் ஆக்ஷன் கிளிம்ப்ஸ் வீடியோவையும் ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் வெங்கட் பிரபு. விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி கன்ஃபார்ம் ஆனது முதலே இப்படம் குறித்து வெளியான அப்டேட்கள் செம்ம மாஸ்ஸாக இருந்தன. முக்கியமாக விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடித்து வருவது, இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

இந்நிலையில், கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்தை விஜய்யுடன் நடிக்க வைத்துள்ளாராம் வெங்கட் பிரபு. அதேபோல், சிவகார்த்திகேயனும் விஜய்க்காக கேமியோவாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த வரிசையில் இன்னொரு டாப் ஹீரோவுக்கும் தூண்டில் போட்டுள்ளாராம் வெங்கட் பிரபு. விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்க, அவருடன் பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்துள்ளது. இதில், கேமியோவாகவும் முன்னணி நடிகர்களை வளைத்துப் போட்டு வருகிறார் வெங்கட் பிரபு.

இப்போது அந்த ஹீரோ யார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அந்த ஹீரோ சிம்பு தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநாடு திரைப்படம் மூலம் சிம்புவுக்கு தரமான பிரேக் கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மாநாடு, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், சர்ப்ரைஸ்ஸாக கோட் படத்தில் சிம்புவை கேமியோவாக நடிக்க வைக்க வெங்கட் பிரபு பிளான் செய்துள்ளாராம். 

மேலும், இந்தத் தகவலை ரொம்பவே சீக்ரெட்டாக வைத்திருந்து, படத்தின் ரிலீஸ் நேரத்தில் வெளியிடவும் வேலைகள் நடந்து வருகிறதாம். அஜித் ரசிகராக வலம் வந்த சிம்பு, ஒருகட்டத்தில் விஜய் தான் தனது அண்ணன் என யூடர்ன் அடித்தார். அதோடு வாரிசு படத்தில் ‘தீ தளபதி’ என ஒரு பாடலையும் பாடியிருந்தார். இதனால் விஜய், வெங்கட் பிரபு இருவருக்காகவும் கோட் படத்தில் சிம்பு கேமியோவாக நடிக்க சம்மதம் கூறிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User