GOAT: விஜய்யுடன் மாஸ் காட்டப் போகும் கேப்டன் விஜயகாந்த்… வெங்கட் பிரபுவின் GOAT சம்பவம் ரெடி!

விஜய்யின் கோட் படத்தில் இருந்து விசில் போடு என்ற முதல் பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தில் கேப்டன் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apr 16, 2024 - 16:26
Updated: 2 years ago
0 302
GOAT: விஜய்யுடன் மாஸ் காட்டப் போகும் கேப்டன் விஜயகாந்த்… வெங்கட் பிரபுவின் GOAT சம்பவம் ரெடி!

சென்னை: விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகரின் ஆஸ்தான ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். கேப்டனின் சினிமா கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது எஸ்.ஏ.சி. இப்படி கோலிவுட்டின் சூப்பர் ஹிட் வெற்றிக் கூட்டணியாக வலம் வந்தவர்கள் விஜயகாந்தும் எஸ்.ஏ சந்திரசேகரும். இந்த நட்பின் அடிப்படையில், தனது மகன் விஜய்க்கு சினிமாவில் நல்ல அறிமுகம் வேண்டும் என எஸ்.ஏ.சி கேட்க, உடனே மறுப்புத் தெரிவிக்காமல் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தார் கேப்டன்.  

முன்னதாக எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் விஜயகாந்தின் ஜூனியர் கேரக்டரில் அவருக்காக நடித்தது விஜய் தான். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் இறுதியில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து விஜய்யும் நேரில் சென்று விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செய்தார். விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போதே விஜய்யின் கோட் படத்தில் அவரும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை சரியில்லாததால் அதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது.  

ஆனால் தற்போது வெளியான தகவலின் படி கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனை விஜயகாந்தின் மனைவி பிரேமலாதாவே கன்ஃபார்ம் செய்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருக்கும் பிரேமலதா, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கோட் படத்தில் விஜயகாந்த் நடிப்பது பற்றி பேசியுள்ளார். அதில், இயக்குநர் வெங்கட் பிரபு இதற்காக தன்னை வீடு தேடிவந்து சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். கேமியோ ரோலில் நடிக்கும் விஜயகாந்தின் உருவத்தை AI டெக்னாலஜியில் உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் விஜய்யும் தன்னை சந்திக்க விருப்பமாக உள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின்னர் அதற்கான நேரம் அமையும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.  

இதன் மூலம் கோட் படத்தில் விஜய்யுடன் கேப்டன் விஜயகாந்தும் மாஸ் காட்டப் போவது உறுதியாகியுள்ளது. இந்த அப்டேட் விஜய் ஃபேன்ஸ் மட்டுமின்றி கேப்டன் ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. மேலும் இதுகுறித்து அபிஸியலாக அப்டேட் வெளியாகுமா அல்லது படம் வெளியாகும் போது தான் தெரியவருமா என்பது புதிராகவே உள்ளது. செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகவுள்ள கோட் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User