GOAT Songs "விசில் போடு".. இந்தா வந்துட்டாங்கல்ல.. நடிகர் விஜய் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார்

GOAT படத்தில் இடம் பெற்றுள்ள "விசில் போடு" பாடலை நீக்ககோரியும், நடிகர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரியும் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Apr 15, 2024 - 15:09
0 617
GOAT Songs "விசில் போடு".. இந்தா வந்துட்டாங்கல்ல.. நடிகர் விஜய் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார்


நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் "GOAT". இந்த படத்தில் இடம் பெற்றுள்ள "விசில் போடு" பாடல் நேற்று சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் விசில் போடு பாடலில் பல்வேறு சர்ச்சைக்கு உரிய பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளதாகவும், பிரச்சினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி நடிகர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆர்டிஐ செல்வம் காவல்துறை  டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

ஆன்லைன் மூலம்  ஆர்டிஐ செல்வம் அளித்துள்ள புகாரில், நடிகர் விஜய் அவர்கள் பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும்  வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும், ஆனால் நடிகர் விஜய்யின் பாடலில் அது இடம் பெறவில்லை என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி கலக்கட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இது தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளதாக புகாரில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் தெரிவித்துள்ளார். 

மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான் நடிகர் கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகரை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது என்றும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். 

இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான், நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் நடிகர் விஜய் என்றும், குடிமகன் தான் நம் கூட்டணி, நடிகர் விஜய் பாடிய பாடல் இளைஞர்களை சீரழிக்கும் வகையில் உள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். 

ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று  இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார். எனவே விசில் போடு பாட்டை உடனடியாக சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படியும் மேலும் நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 4
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User