காலையில் பனிமூட்டம் அதிகரிக்கும், மழை பெய்யவும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்றும், மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Feb 02, 2026 - 11:55
0 478
காலையில் பனிமூட்டம் அதிகரிக்கும், மழை பெய்யவும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 
காலையில் பனிமூட்டம் அதிகரிக்கும், மழை பெய்யவும் வாய்ப்பு

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையில்: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு, கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே சமயம், குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் காரணமாக இன்று முதல் பிப். 5ம்தேதி வரை மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஆனால், இன்று முதல் வியாழக்கிழமை வரும் 5ம்தேதி வரை கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 தமிழக கடலோரப் பகுதிகளில், இன்று முதல் வரும் 5ம்தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் சூறாவளிக்காற்று 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User