டில்லி உணவகத்தில் திடீர் தீ விபத்து: 20 பேர் பலி பலர் கவலைக்கிடம் 

டில்லியில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலியாகியுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Jun 03, 2026 - 07:19
0 233
டில்லி உணவகத்தில் திடீர் தீ விபத்து: 20 பேர் பலி பலர் கவலைக்கிடம் 
டில்லி உணவகத்தில் திடீர் தீ விபத்து

தெற்கு டில்லியில் மால்வியா நகரில் ஹௌஸ் ராணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.காலை 8.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 9.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது.  தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். 

தீ வேகமாகப் பரவியதால் தீயை அணைக்கவும் தீயில் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.  இதுவரை இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் ஏற்பட்டது.  தீ விபத்தில் இருந்து தப்பிக்க பக்கத்தில் இருக்கும் கட்டிடங்களில் மாடிகளில் குதித்து உயிர் தப்பி இருக்கிறார். மாடியில் இருந்து குதித்ததால் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கட்டடத்தின் தரைத் தளத்தில் உணவகம் இயங்கி வந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் எலெக்டரிக் ஸ்டவ் ஆன் செய்யும் அதில் தீப்பொறி ஏற்பட்டு இந்த தீவிபத்து ஏற்பட்டதாக ஹோட்டல் மாஸ்டர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.  இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகின. 20 பேர் உயிரிழந்த சம்பவம் டில்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User