மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு...

பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பதவிக் காலத்தை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Mar 02, 2024 - 17:56
0 152
மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு...

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து வகையான பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை, மே மாதங்களில் திருத்தி அமைக்கப்பட்டன. இந்த அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடைய பதவிக் காலம் 2024 ஏப்ரல், மே, ஜூலை, மே, மாதங்களில் முடிவடைய உள்ளன.

இந்நிலையில், 2024-2025  ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேரும் மாணவர்களின் பெற்றோர்களையும் உள்ளடக்கிய புதிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்கும் பொருட்டு, 2022-2024-ம் ஆண்டிற்கான தொடக்கப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 1.5.2020 முதல் 10.8.2024- வரையும், நடுநிலைப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.4.2024 முதல் 20.7.2024 வரையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 10.7.2024 முதல் 17.8.2024 வரையும் நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User