தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம் : தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய தலைமைச் செயலராக சாய் குமார் ஐஏஎஸ், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி, ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Apr 08, 2026 - 11:01
0 334
தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம் : தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம்

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. இதில் மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் வரும் ஏப்ரல் 23, 29ம் தேதிகளில் நடக்கிறது. வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தலைமை செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி, உள்துறை செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து அறிவித்தது.

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளார். அவருக்கு பதில் சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏப்ரல் 2-ம் தேதி நள்ளிரவிலேயே பதவியேற்றார்.இந்நிலையில் தற்போது தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சாய் குமார் ஐஏஎஸ். இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலராகவும் இருந்துள்ளார். 

இதே போன்று லஞ்சஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.  உத்தரவை உடனே அமல்படுத்தி பணியில் சேர்ந்தது குறித்து மாலைக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User